BREAKING NEWS

Apr 11, 2013

தென் கொரிய இலங்கையர்கள் தொடர்பில் வீண் அச்சம் வேண்டாம்

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக பணியகத்தின் பிரதி இணைப்பதிகாரி மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார்.

அங்குள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களைக் காப்பாற்றுவதற்கும் பாதுகாப்பு இடங்களுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேச அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அவை வெற்றியளித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

தென் கொரியாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான பதிவுகள் அனைத்தும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி இணைப்பதிகாரி மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.

அவசர நிலைமைகளில் செயற்படும் விதம் தொடர்பில் அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &