வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக உஷ்ண வானிலை தொடரும் என, வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் எஸ்.ஆர் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் ஓரளவேனும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தீவாக உள்ள நாடு என்ற வகையில் ஏனைய நாடுகளைப் போல உஷ்ணக் காற்றின் பாதிப்பு ஏற்படாது எனவும், வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் எஸ்.ஆர் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
குறைந்த அளவில் காற்று வீசுவதே உஷ்ண வானிலை நிலவக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.