தாக்குதல் நடத்திய பிரதேசசபை உறுப்பினர் தாக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளரிடம் மாறவில மேலதிக நீதிபதி முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதை அடுத்து வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பவர் 9ஆம் திகதி வென்னப்புவ பிரதேசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பிரதேச சபை உறுப்பினர் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் ஒருவரை தாக்கினார்.
தாக்குதலுக்குள்ளான மொழி பெயர்ப்பாளர் மாறவில ஆதார வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடைய பிரதேசசபை உறுப்பினர் பொலிஸில் சரணடைந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
குறித்த வழக்கு இன்று (02) விசாரணைக்கு வந்த போது பிரதேசசபை உறுப்பினர், மொழிபெயர்ப்பாளரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து வழக்கு முடிவுக்கு வந்தது.