பிரதான தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை
தொடரூந்து திணைக்கள கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
தொடரூந்து சாரதிகள் முன்னறிவித்தல் இன்றி தமது கடமைகளுக்கு சமூகமளிக்காமையே இந்த நிலைக்கான காரணம் என, இலங்கை தொடரூந்து திணைக்கள கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டிற்காக தமது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடரூந்து நிலையத்திற்கு வந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடரூந்து சாரதிகளின் இந்த திடீர் முடிவு காரணமாக 8 மிக முக்கிய தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.