BREAKING NEWS

Apr 9, 2013

BBS அமைப்பு சர்வதேச நடவடிக்கை களை ஆரம்பிக்க வுள்ளதா?

பொதுபல சேனா இந்த மாதத்தில் இருந்து தமது அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதுடன், சர்வதேச சமூகத்திற்கு தெளிவுப்படுத்தும் பணிகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும்,

இதன் முதல் நடவடிக்கையாக அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அமைப்பின் தேசிய அமைப்பாளர் விஹாரன்தேனியே நந்த தேரர் உள்ளிட்ட குழுவினர் நேற்றிரவு அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதகவும் சிங்கள மொழி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு ஒரு மாதம் தங்கியிருக்கும் இவர்கள், அங்குள்ள பௌத்த தேரர்கள் மற்றும் இலங்கையர்களை சந்தித்து தமது அமைப்பின் நோக்கங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கவும் உள்ளதாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &