BREAKING NEWS

Apr 11, 2013

200 பாடசாலைகள் மூடப் பட்டுள்ளன - அக்கில விராஜ்


இலங்கையில் கடந்த 7 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அக்கில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் 1590 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, எந்தவொரு பாடசாலையையும் மூடுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &