உருகுவேயில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அந்த நாட்டுப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான சட்ட மூலத்துக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள இரண்டாவது லத்தின் அமெரிக்க நாடாக உருகுவே கருதப்படுகின்றது.
எனினும் ஒரு சில கிறிஸ்தவ அமைப்புக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஆதரவாளர்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இதுபோன்றதொரு கலாசாரம் வெகுவாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.