இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக திரை உலகினர் இன்று
உண்ணாவிரதம் இருந்தனர். இவர்களின் உண்ணாவிரதம் மாலை ஐந்து மணிக்கு முடிவுற்றது.
லயோலா கல்லு£ரி மாணவர் ஜோ பிரிட்டோவும், சட்டக்கல்லு£ரி மாணவர் சந்திரசேகரும் நடிகர் நடிகைகளுக்கு பழரசம் கொடுத்து இந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்கள்.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி கமலின் வருகை மிக முக்கியமாக கருதப்பட்டது. முற்பகல் 11.30 க்கு வந்த ரஜினி சுமார் 1.30 மணிக்கெல்லாம் அங்கிருந்து வெளியேறினார்.
பிற்பகல் 4.10 மணி வந்த கமல், 5.00 மணிக்கெல்லாம் வெளியேறினார்.
இதே வேளை விஜய் உண்ணாவிரதத்தில் பங்கு கொள்ளவில்லை. எனினும் உண்ணாவிரதத்தில் பெரும்பாலான தமிழ் சினிமா நடிக நடிகைகள் பங்குபற்றியிருந்தனர்.
இதேவேளை போராட்டம் ஆரம்பித்து சில மணித்தியாலங்களின் பின்னர் அவ்விடத்திற்கு வந்த பரத் தனுஷுடன் அமர்ந்து பபிள்க்கத்தை அசைபோட்டபடி இருந்தார்.
இறுதியில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தீர்மானங்களை படித்தார். உண்ணாவிரதம் இனிதே நிறைவுற்றது.