பொரலஸ்கமுவ, பெபிலியானவில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது இன்றிரவு 8 மணியளவில் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், கற்களை வீசியும் வேறு ஆயுதங்களாலும் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இத் தாக்குதல் நீடித்ததாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 100 பேர் கொண்ட குண்டர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கட்டிடத்திற்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிசார் தற்போது நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mar 28, 2013
பொரலஸ்கமுவ, பெபிலியான FASHION BUG மீது குண்டர்கள் தாக்குதல்
Posted by AliffAlerts on 21:58 in NL | Comments : 0


