BREAKING NEWS

Mar 28, 2013

"2014இல் இலங்கை அரசின் ஆட்சி கவிழும்" : மங்கள

இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என, மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் சர்வதேச நாடுகள் கொண்டுவந்த பிரேரணை மற்றும் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் போன்றவை இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படுபவை அல்ல. அவை அனைத்தும் இலங்கையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ராஜபக்க்ஷகளுக்கு எதிரானவை என, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சட்டத்தையும் நியாயத்தையும் மதிக்காத ராஜபக்க்ஷ அரசாங்கத்தை 2014 ஆம் ஆண்டு முடிவிற்கு கொண்டுவந்து, ஐக்கிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது உறுதி என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &