.jpg)
வடமேல் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் சட்டத்தரணியூமான அல்ஹாஜ் றிஸ்வி ஜவஹர்ஷாவூடனான விஷேட கலந்துரையாடல் கூட்டம் இன்று 22-03-2013 வெள்ளிக்கிழமை பி.ப 5.00 மணியளவில் பறகஹதெனிய பாடசாலை வீதி அல்ஹாஜ் பௌஸ் அவர்களது வீட்டில் இடம்பெற்றது.
பறகஹதெனிய பாடசாலை மற்றும் ஏனைய சமூக கலாச்சார விடயங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி விடயங்கள் பற்றி ஆலோசிப்பதற்காகவே இந்த விஷேட கூட்டம் ஜனாப் தஸ்லிம் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தின் போது முக்கியமாக பறகஹதெனிய தேசியப் பாடசாலையின் அபிவிருத்தி ஏனைய பௌதீக வசதிகளை மேம்படுத்தல் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பற்றி கலந்தோலோசிக்கப்பட்டதுடன் பறகஹதெனிய தேசியப் பாடசாலையின் வளங்கள் மற்றும் கனிஷ்ட பிரிவினை தனியாக ஆரம்பித்தல் போன்ற விடயங்களுக்காக முக்கிய ஆலோசனைகள் அல்ஹாஜ் றிஸ்வி ஜவஹர்ஷா அவர்களினால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், பறகஹதெனிய கிராமத்திற்காக றிஸ்வி ஜவஹர்ஷா அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சேவைகள் சகோதரர் அலிகான் சகோதரர் இர்ஷாத் மற்றும் சகோதரர் தஸ்லிம் ஆகியோரினால் ஞாபகப்படுத்தப்பட்டதுடன் முக்கியமாக பறகஹதெனிய தேசியப் பாடசாலைக்கு பாரிய குறைபாடாகவிருந்த பிரதான வீதி பெயர்ப் பதாகை மற்றும் பாடசாலை பிரதான மதில் என்பவற்றை அமைப்பதற்கு செய்த ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை விஷேடமாக நினைவூகூர்ந்து நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் பறகஹதெனிய தேசியப் பாடசாலைக்குத் தேவையான காணிகளை மீற்பதற்குத் தேவையான முக்கிய பல ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.
இதன்போது தமது ஒதுக்கீட்டுப் பணத்திலிருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பணத்தினை மிகுதி மதில் கட்டுமானப் பணிகளுக்காக பெற்றுத்தருவதாக இக்கூட்டத்தின்போது றிஸ்வி ஜவஹர்ஷா அவர்களினால் வாக்குறுதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலுக்கு பறகஹதெனிய தேசியப் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பறகஹதெனிய சமாதான இயக்கத்தின் உறுப்பினர்கள் பறகஹதெனிய இளைஞர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பறகஹதெனிய பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)