BREAKING NEWS

Mar 25, 2013

BBS தேரர் முஸ்லிம் கடையில் பெருமளவு பொருள் கொள்வனவு


குருநாகல் மாவட்டத்தில் பொதுபல சேன அமைப்பின் தீவிர ஆதரவாளராக செயற்பட்ட பௌத்த தேரர் ஒருவர் முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் பெருந்தொகையான கட்டடப் பொருட்கள் கொள்முதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பௌத்த தேரர் பௌத்த விஹாரைக்கு கட்டடப் பொருட்கள் வாங்குவதற்காக முஸ்லிம் வர்த்தக நிலையம்  சென்று அந்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் பொருட்களின் விலை சம்மந்தமாக உரையாடியுள்ளார்.

அந்த முஸ்லிம் வர்த்தக நபர் தற்போதைய சூழலைக் கருத்திற்கு கொண்டு அங்கு வருகை தந்த தேரரை மிக அன்புடன் வரவேற்று மிக்க மரியாதையுடன் அவரை அமரச் செய்து நல்ல பண்புடன் நடந்துள்ளார். 

அந்த தேரர் விஹாரைக்கு கட்டடப் பொருட்கள் தேவை எனக் கூறியதும் அக் கடை வியாபாரி  தான் பெற்ற விலையிலிருந்து எந்த இலாபமும் அறவிடவில்லை எனவும் தன்னுடைய வியாபாரத்தின் உண்மைத் தன்மையையும் அவருக்கு  நன்கு விளக்கியுள்ளார். அதன் பின்  அக் கடையில் அந்த தேரர் இலட்சக் கணக்கில் பொருட்கள் வாங்கி சம்வம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இது போன்று நமது முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் எமது முஸ்லிம்கள் நடந்து கொண்டால் முஸ்லிம்களுக்கு எதிராக தீய எண்ணத்துடன் செயற்படும் பௌத்த தேரர்களின் மனதை மிக இலவாக வெற்றி கொள்ள முடியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &