BREAKING NEWS

Feb 26, 2013

LLRC பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப் படுத்தவில்லை - அமெரிக்கா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இனப் பிரச்சினைக்கான உரிய தீர்வினை இதுவரையில் அந்நாட்டு அரசு பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்களுக்கான துணைச் செயலாளர் எஸ்தார் பிர்மர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் இன்று (26) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத் தொடரின் 2வது நாள் உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இம்முறையும் இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானத்தை ஐக்கிய அமெரிக்கா முன்வைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றப்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் இதன்போது அவர் கூறினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &