பாடசாலை விளையாட்டுப் போட்டியின்போது 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட 18 வயதான மாணவி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
அரனாயக்க உஸ்ஸபிட்டியவில் உள்ள ரிவிசந்த மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மைதானத்தில் மயங்கி விழுந்த இந்த மாணவி மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை அரனாயக்க பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.