BREAKING NEWS

Feb 21, 2013

ஹலால் அநாவசிய பிரச்சினை: அரசு

ஹலால் முத்திரை குத்தப்பட்ட உணவுகளை சிலர் வேண்டும் என்கின்றனர் சிலர் வேண்டாம் என்கின்றனர். இன்னும் சிலரோ அந்த முத்திரை குத்தப்பட்டால் தான் என்ன? என்று வினவுகின்றனர் ஹலால் அநாவசிய பிரச்சினையாகும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடி இறுதி முடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு கூறினார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
ஹலால் விவகாரத்தை அநாவசிய பிரச்சினையாக்குவதற்கு பிரச்சினை இருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு பொருட்களை ஏற்றும் போது அதில் ஹலால் முத்திரை குத்தப்பட்டிருக்கின்றதா? என்பதனையே பார்க்கின்றனர்.

இந்த விவகாரத்தை பிரச்சினையாக்கவேண்டிய தேவையில்லை இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் அவர் சொன்னார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &