BREAKING NEWS

Feb 21, 2013

ஹைதராபாத் தொடர் குண்டு வெடிப்பு: 15பேர் பலி; பலர் காயம்

இந்தியாவின் ஆந்திர மாநில தலைநகரான ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் சுமார் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இக்குண்டுவெடிப்புகளில் சிக்குண்டு சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்தின் தில்சுக் நகர் பகுதியின் திரையரங்கு மற்றும் சந்தைத் தொகுதியடங்கிய மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலேயே இக்குண்டு வெடிப்பு சம்பவம் நிழ்ந்துள்ளது. தேசிய பாதுகாப்பு பிரிவினரும் மீட்பு படையினரும் தற்சமயம் குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே உத்தியோகபூர்வ இழப்பு பற்றி அறிந்துகொள்ள முடியுமெனவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &