BREAKING NEWS

Feb 22, 2013

சவால்களை எதிர் கொள்ளத் தயார் : அரசாங்கம்


ஐக்கிய நாடுகளின் ஜெனீவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு தாம் தயாராகவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஊடகத் துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கூட்டத் தொடருக்காக இலங்கை சார்பாக செல்லவுள்ள குழு தொடர்பில் அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை.
எனினும் அக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். குறிப்பாக சனல்-4 வினால் இலங்கைக்கு எதிராக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒளிநாடா குறித்தும் முகங்கொடுக்க தயாராகவேயுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &