BREAKING NEWS

Feb 28, 2013

கேகாலை பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முதலமைச்சர் அவசர கூட்டம்

கேகாலை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமை தொடர்பிலான அவசர கூட்டமொன்று தற்போது இடம்பெறுகின்றது.

சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹியபால ஹேரத் தலைமையிலான இந்த கூட்டம் கேகாலை மாநகர சபையில் இடம்பெறுகின்றது.

கேகாலை நகரிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை இனந்தெரியாதநபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக பள்ளிவாசலின் கண்ணாடிகள் கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் இன்று காலை பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளார்.

இதனை தொடர்ந்தே சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹியபால ஹேரத் தலைமையில் கேகாலை மாநகர சபையில் விசேட கூட்டமொன்று இடம்பெறுகின்றது. இந்த கூட்டத்தில் பொலிஸார் மற்றும் அரசாங்க முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கொழும்பு – கண்டி வீதியில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்பதுடன் இந்த பள்ளிவாசல் மீதே இன்று அதிகாலை இரண்டு மணியளவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று காலி, ஹிரும்புரை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது கடந்த வெள்ளிக்கிழமை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/59728-2013-02-28-06-35-31.html#sthash.DHsi4Qwd.dpuf

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &