கொழும்பு சுவர்ன ஜயந்தி மந்திரயவில் அமைந்துள்ள பொது பலசேனா தலைமையகத்திற்கு திடீரென்று விஜயம் செய்த குருணாகல் மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ.ல.சு. கட்சியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளருமான அப்துல் சத்தார் உட்பட்ட குழுவினர் பொது பலசேனா இயக்கத்தின் தலைவர் தலைவர் கிரம விமலஜோதி தேரர், செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இணைப்பாளர் திலன்த கமகே ஆகியோரை சந்தித்ததுடன் இலங்கையில் இன்று முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள முக்கியமான பிரச்சனைகள் சம்பந்தமாக மிகவும் சுமூகமான முறையில் பேச்சு வார்த்தை நடத்தினர். தமது இயக்கம் எந்த வகையிலும் இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்பதில் உறுதியாக இருந்த பொது பலசேனா அமைப்பினர் பல சம்பவங்களில் முஸ்லிம்களுக்கு எழுந்த பிரச்சணைகளில் தாம் முன்னின்று இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்து இந்நாட்டு மக்களின் சக வாழ்வு சம்பந்தமாக பொது நிலமையில் இருந்ததை எடுத்துக்கூறினர். சுமார் இரண்டு மணத்தியாளஙகள் இடம்பெற்ற இந்த சந்திப்பு சமபந்தமாக அப்துல் சத்தார் கருத்துத்தெரிவிக்கையில் இன்று இலங்கை முஸ்லிம் மக்கள் வாழும் அச்சமான நிலையிலிருந்து முஸ்லிம்களின் சுமூக நிலைக்கு கொண்டு வரலாம் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு இரண்டு சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையையும் சகவாழ்வையும் மீன்டும் உருவாக்குவதற்கு இந்த சந்திப்பு வழி வகுத்ததாகவும் தொடர்ந்தும் இது சம்பந்தமான முயற்சிகளில் தான் மும்மரமாக இருப்பதாகத்தெரிவித்தார்.
