மஹரகமயில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா நடாத்திய கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அந்த தீர்மானங்கள் பின்வருமாறு,
* ஹலால் சான்றிதழ் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்
* முஸ்லிம் நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி மூலம் பள்ளிவாசல்கள் அமைப்பதை தடைசெய்ய வேண்டும்.
* வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய போதனைக்காக வருவோரை தடை செய்தல்
உள்ளிட்ட முக்கிய 10 தீர்மானங்களே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொது பலசேனா ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான பௌத்த குருமாரும், இளைஞர்கள் அதிகமானவர்களும் கலந்துகொண்டதாக அறியவருகிறது.
இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு முஸ்லிம்களின் உலமா சபையே காரணம் என்று இக்கூட்டத்தில் கூறியுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர், உலமாக்கள் சபையை தடை செய்ய வேண்டும் என்றும் பேசியதாக அந்தக் கூடத்துக்குச் சென்ற ஒருவர் BBC க்கு கூறியுள்ளார்.