BREAKING NEWS

Jan 20, 2013

தடை செய்யப்பட்ட மருந்து விற்பனையில் ஈடுபட்ட வைத்தியர் கைது





























போதையை எற்படுத்தக் கூடிய தடை செய்யப்பட்ட மருந்துப் பொருளை விற்பனை செய்த வைத்தியர் ஒருவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இந்த போதை ஏற்படுத்தும் மருந்தினை விற்பனை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னதாக நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் 17,500 ரூபா கொடுத்து குறித்த மருந்தினை வாங்கியுள்ளனர்.

பரிசோதனைகளின் போது இந்த மருந்து விற்பனைக்கு தடையானது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வைத்தியர் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &