மோசடிகாரர்களை தராதரம் பாராது தண்டிக்க அரசு ஒருபோதும் பின்னிற்காது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு அரசியல் அமைப்புக்கு ஏற்ப செயற்படுவதாகவும் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் அதேவேளை, நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க முடிந்தளவு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்தை இன்று (18) திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
போதைப் பொருள் பாவனை சமூகத்தை சீரழிக்கும் ஆயுதமாக மாறியுள்தென ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவிரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டது போன்று போதைப் பொருள் பாவனையில் இருந்து எதிர்கால சந்ததியை மீட்க அனைவரும் முன்வர வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
Jan 18, 2013
மோசடி காரர்களை தராதரம் பாராது தண்டிப்போம் - மஹிந்த
Posted by AliffAlerts on 16:45 in NL | Comments : 0
