BREAKING NEWS

Jan 18, 2013

சட்ட விரோத மின் இணைப்பு பெற்றவர்களால் 212 மில்லியன் லாபம்

கடந்த வருடம் இலங்கை மின்சார சபை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையால் 212 மில்லியனுக்கும் அதிகமான அபராத பணம் லாபமாக பெறப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 3569 பேர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 2012இல் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்களின் தொகை 50 சதவீதத்தால் குறைந்துள்ளதென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மின் இணைப்பு பெறும் நபர்களை தேடி தொடர்ந்தும் சோதனை நடாத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &