மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாடசாலை அப்பியாசப் புத்தகங்களை பணத்திற்கு விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை - நுவரெலியா வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு புத்தகங்களை விற்பனை செய்த நபரே கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் தரத்தில் இருந்து 11ம் தரம் வரை சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்ட 1050 புத்தகங்களே விற்பனை வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Jan 8, 2013
இலவச கல்வி பணத்திற்கு விற்பனை! சந்தேகநபர் கம்பளையில் கைது
Posted by AliffAlerts on 15:40 in செய்தி உள்ளூர் | Comments : 0
