BREAKING NEWS

Jan 21, 2013

மஹரகம பன்னிப்பிட்டியவில் பறக்கும் தட்டு..?

மஹரகம பன்னிப்பிட்டியவில் பறக்கும் தட்டு போன்ற வடிவத்தை இன்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் கண்ணுற்றதாக அப்பகுதி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியை திருமதி ராமநாயக்கா உறுதிப்படுத்தியதாக கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் அப்துல் மஜீத் எமது இணையத்திடம் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் பறக்கு தட்டு போன்ற உருவத்தை கண்ணுற்றதும், குறித்த ஆசிரியை அதனை ஏனையவர்களுக்கும் காண்பித்துள்ளார். சம்பந்தப்பட்வர்கள் அதனை புகைப்படமெடுக்க முயலுவதற்கு இடையே பறக்கும் தட்டு போன்ற உருவம் அவ்விடத்தை விட்டு வேகமாக நகர்ந்து விட்டதாகவும் குறித்த ஆசிரியை குறிப்பிட்டுள்ளார்.

J M

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &