BREAKING NEWS

Jan 8, 2013

பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகளின் பிரதிக்கான கட்டணங்களும் அதிகரிப்பு

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுகளின் பிரதிகளை பெறுவதற்கான கட்டணங்கள் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரதிக்கான கட்டணமாக 100 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதிவிலக்கம் தெரியாத விடத்து அதற்கான தேடுதல் கட்டணமாக ஒரு பிரதிக்கு 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பதிவு பெறும் ஒருவர் அந்த பதிவுக்கான விண்ணப்ப படிவத்தில் அதற்கு பெறுமதியான முத்திரை ஒட்டாமல் அதற்கான பணத்தை பிரதேச செயலகங்களிலுள்ள பதிவுக் கிளையில் செலுத்தி பற்றுச் சீட்டை பெற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுகளின் பிரதி ஒன்றுக்காக 25 ரூபா முத்திரை செலுத்தும் நடைமுறை முன்னர் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &