BREAKING NEWS

Sep 16, 2012

4 வருடங்களின் பின் மீண்டும் யூசுப்: போட்டி சமநிலையில் முடிவூ


இலவன் ஸ்டார்ஸ் மற்றும் திருகோணமலை இக்பால் அணிகளுக்கிடையில் பறகஹதெனிய தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்ற போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவூற்றது.

சிறந்த முறையிலே திருகோணமலை இக்பால் விளையாட்டுக் கழக அணியினர் தமது திறமைகளை வெளிப்படுத்தியதுடன் தமது ஆதிக்கத்தை சிறந்த முறையில் போட்டி முழுவதும் தக்க வைத்து விளையாடியதை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலவன்ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகத்தை பொறுத்தவரையில் முன்னனி வீரர்கள் பலருக்கு இப்போட்டியில் ஓய்வூ வழங்கப்பட்டிருந்ததுடன்  4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது பயிற்சிகளை அண்மையில் ஆரம்பித்த குருநாகல் மாவட்ட கோல் காப்பாளர் யூ+சுப் இன்றைய போட்டியில் கோல் காப்பாளராக செயற்பட்டமை அனைவரதும் பாராட்டைப்பபெற்ற விடயமாக அமைந்தது.

4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய யூ+சுப் சிறந்த முறையில் ஏனைய வீரர்களை கோல் காப்பாளராக இருந்து வழிநடாத்தியதுன் சிறந்த முறையிலே தனது திறமையையூம் வெளிகாட்டியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 அணியின் கோல் காப்பாளருக்கான பிரச்சினை நிலவிக் கொண்டிருக்கும் தருவாயில் யூ+சுப் மீண்டும் அணிக்குள் வருகை தந்தமையானது அணிக்கு மேலதிக சக்கியொன்றாக அமைவதாக அணியினர் தெரிவிக்கின்றனர்.








Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &