BREAKING NEWS

Sep 15, 2012

இவ் ஆண்டின் சிறந்த வீரராக குமார் சங்கக்கார தெரிவு 3 ஐ.சி.சி விருதுகள்

ஐ.சி.சி விருது வழங்கல் விழாவில் இலங்கை வீரர் குமார் சங்கக்கக்கார, வருடத்தின் சிறந்த வீரர் உட்பட மூன்று விருதுகளை வென்றுள்ளார். 

கொழும்பில் இன்றிரவு  நடைபெற்ற   ஐ.சி.சி விருது வழங்கல் விழாவில் வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது மற்றும் மக்களின் தெரிவு விருது ஆகியவற்றையும் குமார் சங்கக்கார வென்றார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான வருடத்தின் சிறந்த வீரர் விருதை இந்தியாவின் வீரட் கோலி வென்றார். இலங்கையை சேர்ந்த குமார் தர்மசேன வருடத்தின் சிறந்த நடுவருக்கான விருதை வென்றுள்ளார்.

சிறந்த கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கான விருது நியூஸிலாந்து வீரர் டேனியல்வெட்டோரிக்கு வழங்கப்பட்டது. மேற்கிந்திய வீரர் சுனில் நரைன் சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதை வென்றார்.  இருபது20 போட்டிகளின் சிறந்த வீரர் விருதை தென்னாபிரிக்காவின் ரிச்சர்ட் லெவி வென்றார். 

வருடத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டெபானி டெய்லர் வென்றார்.  மகளிருக்கான இருபது20 பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான விருதை இங்கிலாந்தின் சாரா டெய்லர் வென்றார்.





Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &