Sep 19, 2012
பறகஹ தெனியவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு
Posted by AliffAlerts on 23:00 in செய்தி உள்ளூர் | Comments : 0
முஹம்மது நபியை அவமதிக்கும் குறித்த திரைப்படத்தை எதிர்த்தும், YOUTUBE (Google) இணையத்தளத்திலிருந்து குறித்த காணொலியை அகற்றுமாறு கோரியூம், குறித்த திரைப்படத்தை ஒளிபரப்பு செய்வதை சர்வதேச ரீதியில் தடைசெய்யக் கோரியூம், ஆரப்பாட்டப் பேரணியொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21-09-2012) நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக பறகஹதெனிய ஜும்ஆப் பள்ளிவாயல்களின் பொறுப்பாளர்கள் இன்றிரவூ (19-09-2012) ஆலோசனை நடாத்தியூள்ளனர்.
இது பற்றி மேலதிக தகவல்கள் விரைவில் அறியத்தரக் காத்திருக்கின்ரோம் அத்துடன் ஆர்ப்பாட்டப் பேரணியின் நேரடி ஒளிபரப்புக்கள் எமது www.aliffalerts.com இணையத்தளத்தினூடு தருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.
