BREAKING NEWS

Sep 7, 2012

ஐ போன்5 இல் ' நெனோ சிம்' ?


அப்பிள் தனது ஐ போன் 5 ஸ்மார்ட்போனை இன்னும் சில தினங்களில் வெளியிடவுள்ளது.

தற்போது ஐ போன் 5 தொடர்பான எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் ஐ போன் 5 மூலமாக அப்பிள் மாற்றமொன்றினைக் கொண்டுவரவுள்ளதாகத் தெரிகின்றது.

ஆம், அம்மாற்றம் தொலைத்தொடர்பாடல் வலையமைப்புக்கும் , கையடக்கத்தொலைபேசிக்கும் பாலமாகத் திகழும் சிம் அட்டையிலாகும்.

கையடக்கத்தொலைபேசிகளின் ஆரம்பகாலத்தில் சிம் அட்டைகள் கடனட்டை அளவில் காணப்பட்டன.

இவ் அளவானது காலப்போக்கில் சுருங்கி தற்போது பரவலாகப் பாவனையில் உள்ள வடிவத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆனால் அப்பிள் ஐ போன் 4 இனை அறிமுகப்படுத்தியபோது  'மைக்ரோ சிம்' எனப்படும் தற்போது பாவனையிலுள்ள சிம் அட்டையினை விட அளவில் சிறியதனை அறிமுகப்படுத்தியது.

தற்போது தனது ஐ போன் 5 இல் மைக்ரோசிம்மினை அதை விட சிறிய நெனொ சிம்மினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகின்றது.


மைக்ரோசிம் ஒன்றின் அளவு 15 x 12 x 0.76 mm .ஆனால் நெனோ சிம் ஒன்றின் அளவு 12.3 x 8.8 x 0.67 mmஆகும். அதாவது நெனோ சிம் மைக்ரோ சிம்மினை விட 40 சதவீதம் சிறியதாகும்.

சிம் அட்டையின் அளவு குறைக்கப்படுதல் என்பது அட்டையில் காணப்படும் மேலதிக பிளாஸ்டிக்கின் அளவினைக் குறைத்தலாகும்.

ஜேர்மனியில் உள்ள தொலைத்தொடர்பாடல் நிறுவனமொன்றுக்கு அப்பிள் இந் நெனோ சிம்மினை பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்கென வழங்கியுள்ளதாகத் தெரிகின்றது.

அச் சிம் அட்டைகளுடன் அப்பிள் வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் குறிப்பு இதோ,



இவ்வருட ஆரம்பத்தில் தனது நெனோ சிம் அளவினை சிம் அட்டையின் நியம அளவாக அங்கீகரிக்கக் கோரி அப்பிள் நிறுவனம் ஐரோப்பிய தொலைத்தொடர்பாடல் தரப்படுத்தல் நிறுவனத்திடம் European Telecommunications Standard Institute (ETSI) கோரியிருந்தது.

பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் அப்பிளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் சிம்மின் அளவும் அங்கீகரிக்கப்பட்டது.

சிம் மட்டுமன்றி ஐ போன் 5 இல் அப்பிள் பல புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.

குறிப்பாக ஐ போன்5 க்கான  ஹெட் போன் வடிவத்தினை மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் இன்னும் சில தினங்களில் அதாவது 12 ஆம் திகதி எது உண்மை எது பொய் எனத் தெரிந்துவிடும்.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &