BREAKING NEWS

Aug 26, 2012

பல்கலைக்கழக விரிவூரையாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு விடயத்தில் ஜனாதிபதி தலையீடு


சுமார் 8 வார காலமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பல்கலைக்கழக விரிவூரையாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு விடயத்தை முடிவூக்கு கொண்டுவரும் நோக்கில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலையிட்டு இருக்கிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவூ பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் பெஷில் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போது பல்கலைக்கழக விரிவூரையாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கப்பட்டதுடன் அதற்கான தீர்வாலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

அவற்றை கடந்த புதன்கிழமை அறிக்கையாக்கப்பட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் வழங்கப்பட்டிருப்பதுடன் அவ்வறிக்கையடிப்படையில் மேலதிக கலந்துரையாடலுக்காகவூம் இறுதித் தீர்வூகளுக்காகவூம் ஜனாதிபதி முன்வந்திருப்பதாகவூம் அதில் தீர்வூ கொடுக்கப்படும் எனவூம் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை ஜனாதிபதி தலைமையிலான சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது. இதற்கு பல்கலைக்கழக விரிவூரையாளர்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவரது செயலாளர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் உட்பட முக்கிய பலர் கலந்துகொள்ள இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் நிரந்தரத் தீர்வூ கிடைக்கப்பெறும் எனவூம் அடுத்த சில தினங்களில், மூடப்பட்டிருக்கும் சகல பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவூம் எதிர்பார்க்கப்படுகின்றது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &