BREAKING NEWS

Aug 18, 2012

பறகஹதெனிய ப்ரிமியர் லீங் போட்டியில் வைட் ரோயல்ஸ் அணி வெற்றி

ALIFFALERTS ஊடக அனுசரனையூடன் ஆறு அணிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற பறகஹதெனிய ப்ரிமியர் லீங் போட்டியின் இறுதிப்போட்டி இன்று பறகஹதெனிய தேசியப் பாடசாலை மைதானத்தில் பி.ப 5.00 மணியளவில் இடம்பெற்றது. WWW.ALIFFALERTS.COM இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட இப்போட்டியில் வைட் ரோயல்ஸ் மற்றும் யெலோ வைப்பர்ஸ் அணியினர் பங்குபற்றினர். ஆரம்பம் முதலே இரு அணியினரும் சிறப்பாக ஆடி தமது அணிக்கு கோல் ஒன்றை பெற்று முன்னிலை வகிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் தீவிரமாக ஆடினாலும்கூட முற்றாக போட்டி முடிவடையூம் வரை எவ்வித கோல்களையூம் இரு அணிகளுக்கும் பெறமுடியவில்லை. ஆட்ட நேரத்துக்குள் 2 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கும் அளவூக்கு போட்டியின் தீவிரத் தன்மையை அனைவருக்கும் காணக்கூடியதாக இருந்தது. போட்டியின் முழு நேர முடிவில் இரு அணிகளும் சமநிலையிலிருந்ததால் வெற்றியை நிர்ணயிப்பதற்காக பெனல்டி உதைகள் 3 வீதம் வழங்கப்பட்டன. அதில் வைட் ரோயல்ஸ் அணி சார்பாக சபாஸ் முஜாஹித் மற்றும் தாபிர் ஆகியோரும் யெலோ வைப்பர்ஸ் அணி சார்பாக பரூஸ் மற்றும் சதாம் ஆகியோரும் பங்குபற்றினர் இருந்தாலும் யெலோ வைப்பர்ஸ் அணித் தலைவர் பரூஸ் தனது பெனல்டி சந்தர்ப்பத்தை தவறவிட்டதனால் 3-2 என்ற அடிப்படையில் வைட் ரோயல்ஸ் அணியினர் பறகஹதெனிய ப்ரிமியர் லீங் 2012 போட்டியின் சம்பியன் கிண்ணத்தை சவீகரித்துக்கொண்டனர். அத்துடன் எதிர்வரும் 7 திகதி ப்ரசிடன்ட் கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற நிலமையில் இப்போட்டியின் மூலம் அதிசிறந்ததோர் அணியை தெரிவூ செய்யூம் சந்தர்ப்பம் இலவன் ஸ்டார்ஸ் அணியினருக்கு கிடைக்கும் என்பது நிச்சயம்

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &