இவ்வொன்றுகூடலில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ச்சரித ஹேரத் மற்றும் ஜன சபா செயலாளர் தம்ம திஸானாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டதாகவூம் அரசாங்கத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும் இதன்போது பெறப்பட்ட முடிவூகள் என்னவென்பது பற்றியோ அல்லது இறுதித் தீர்வூ என்னவாக அமையூம் என்பது பற்றியோ எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை. அத்துடன் ஜனாதிபதி இன்று இரவூ அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் நோக்கி பயணமாவதும் குறிப்பிடத்தக்கது.