BREAKING NEWS

Aug 25, 2012

20க்கு 20 உலகக் கிண்ண பிரச்சாரம்...

இலங்கையில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கான பிரச்சார நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'விசிவர ஜயநத' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரச்சார நிகழ்வுக்காக 10 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட 20 விக்கட்டுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவற்றை நாடு முழுவதும் கொண்டு சென்று அவற்றில் கையெழுத்துக்களைப் பெற்று இலங்கை அணி வீரர்களை ஊக்குவிப்பதே இந்த பிரச்சார நடவடிக்கையின் நோக்கமாகும்.  இதன் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கையெழுத்தினை மேற்படி விக்கெட்டில் பொறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &