BREAKING NEWS

Mar 17, 2013

சவூதி பிரஜைகள் வெளி யேற்றப்பட வேண்டும்: சம்பிக்க

மதரஸாக்களில் இருக்கும் சவூதி அரேபிய பிரஜைகள் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்
சவூதியில் இருந்து இலங்கை வந்துள்ள சுமார் 700 பேர் மதரஸாக்களில் கற்பித்து வருகின்றனர். அண்மைகாலமாக நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இவர்கள் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நீண்டகாலமாக இலங்கையில் தங்கியிருந்து மத்ரஸாக்களில் அரபு மொழியை கற்பித்து வரும் இந்த சவூதி அரேபிய பிரஜைகள் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சர் தான் எழுதிய அல் – ஜிகாத் – அல் கைதா (முஸ்லிம் அடிப்படை வாதம் இலங்கையில் அதன் தாக்கம் தொடர்பான ஆய்வு !!) என்ற நூல் வெளியிட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஹலால் பிரச்சினை மாத்திரமல்லாது முஸ்லிம் பெண்கள் ஹபாயா உள்ளிட்ட கறுப்பு உடை அணிவதை தீவிரப்படுத்தும் நடவடிக்கை மற்றும் ஏனைய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு இந்த மதரஸாக்களுக்கு தொடர்பு உள்ளது. இந்நிலையில் குறித்த அரேபிய பிரஜைகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என அவர் தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது , மாலதீவில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக ஆயிரக் கணக்காணவர்கள் இலங்கையில் உள்ளனர் அவர்கள் தெஹிவளை , இரத்மலானை போன்ற பிரதேசங்களில் வசிக்கின்றனர் அவர்கள் அரசியல் புகழிடம் கோருகின்றனர் அதேபோன்று பர்மாவில் இருந்தும் இலங்கைக்கு வந்து அரசியல் புகழிடம் கோருகின்றனர் அவர்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்று செய்யப்பட்டு அவர்கள் உடனடியாக திருப்பியனுப்பப் படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &