BREAKING NEWS

Mar 20, 2013

மஸ்கெலிய மாணவி தூக்கிலிட்டு தற்கொலை!

ஹட்டன் - மஸ்கெலியா பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மஸ்கெலியா - கவரவில தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் இன்று (20) இரவு 08 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த மாணவி உயர்தரம் கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மஸ்கெலிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &