BREAKING NEWS

Mar 20, 2013

தேரர்கள் மீது தாக்குதல்; ACJU கண்டனம்

தமிழ் நாட்டில் தேரர்கள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் யாத்திரிகள் மற்றும் கல்வி கற்க சென்றவர்களே இவ்வாறு தாக்கப்பட்டதாகவும் இவர்களை பாதுகாப்பது இந்திய அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும் இந்திய அரசாங்கத்திடம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கோரிக்கைவிடுத்துள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &