BREAKING NEWS

Aug 20, 2015

புதிய அமைச்ச -ரவையில் 4 முஸ்லிம் அமைச்சர்கள்




பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் 4 முஸ்லிம்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக இணையத்திற்கு தகவல்கள் கிடைத்தன.

றிசாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம், கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட முஸ்லிம் அமைச்சர்களில் ஒருவருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே இன்று இரவு முக்கிய பேச்சுவார்த்தையொன்றும் நடைபெறவுள்ளது.

இந்த முஸ்லிம் அமைச்சர்களுடன் கபினட் பதவியில்லாத 2 முஸ்லிம் அமைச்சர்களும் 2 முஸ்லிம் பிரதியமைச்சர்களும் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சில வேளைகளில் சுதந்திர கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படுமாயின் பௌசியும் அமைச்சராக இணைத்துக்கொள்ளப்படுவாரெனவும் அறியக்கிடைத்தது

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &