BREAKING NEWS

Oct 24, 2014

இது வரையான பட்ஜெட் (2015) அறிவிப்புகள் இவை..

MR__2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று  பாராளுமன்றுக்கு வருகை தந்த நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்படுகிறது ..
இதுவரையான பட்ஜெட் அறிவிப்புகள் இவை..
நாடு தற்போது அபிவிருத்திப் பாதையில் செல்கிறது- உள்நாட்டு உற்பத்திகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
கடந்த கால ஆட்சிகளில் அரச சேவைகளுக்கு ஊழியர்கள் இணைத்துக்கொள்ளாமை காரணமாக பெரும் பின்னடைவு காணப்பட்டது
கடந்த கால ஆட்சியின்போது கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கவில்லை, அப்போது விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் கொழும்பு வரை இருந்தது. புலிகள் சிறுவர்களை யுத்தத்துக்கு பலாத்காரமாக இணைத்துக்கொண்டனர் என தெரிவித்த ஜனாதிபதி
வடக்கில் அன்றைய காலங்களில் பாடசாலைக்குச் சென்ற சிறுவர்கள் விடுதலைப் புலிகளாகவே வீடு திரும்பினார்கள். அல்லது தற்கொலை குண்டுதாரிகளாக திரும்பினார்கள்
யுத்தத்தின் பின்னர் உட்கட்டுமான வசதிகளை அதி துரிதமாக செய்து வருகிறோம்  எனவும்  ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது வரையான பட்ஜெட் அறிவிப்புகள்.
2017 ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் குழாய் நீர் விநியோகத் திட்டம்
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பெரும்பாலான அரச தலைவர்கள் எமது நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார்கள். சர்வதேச உறவினை வளர்ப்பதில் எமது அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அரச படைகளில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள்.
தேசிய பாதுகாப்பு நலன் கருதி வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக எமது இராணுவத்தினர் கடுமையாக உழைத்தார்களே தவிர தனியொரு இனத்தை இலக்கு வைத்து செயற்படவில்லை
2018 இல் வடக்கு அதிவேக பாதையை நிர்மாணித்து முடிக்கவுள்ளோம்.
மாணவர்களின் திறன் விருத்திக்காக எமது அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்ப பாடங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளும் நோக்கில் காத்திரமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 10 பேரில் 9 மாணவர்கள் கிராமத்துப் பாடசாலைகளைச் சேர்ந்தவர்கள்.
இலவச சுகாதாரத்துக்கு 150 பில்லியன் ரூபா தற்போது செலவிடப்படுகிறது.
கிராம மட்ட அரச ஊழியர்களுக்கு 1 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் வழங்கியுள்ளோம்.
வடக்கில் விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்ட 1 இலட்சம் வீடுகளை புனரமைத்துள்ளோம்
மலேரியா நோய் இல்லாத நாடாக இலங்கையை மாற்றியிருக்கிறோம்.
கடும் வறட்சி காரணமாக எமது நாட்டில் அரிசி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அரிசி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்ட போதும் மரக்கறி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டது.
இவ்வருடம் வெளிநாடுகளிலிருந்து வரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தை தாண்டியுள்ளது.
ஆடைத்துறை ஏற்றுமதி 15 வீதத்தால் வளர்ச்சியடைந்திருக்கிறது.
நிபுணத்துவம் மிக்கவர்கள் வெளிநாட்டுக்கு தொழிலுக்காக செல்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு, பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி.
சிசு மரணம் இல்லாத நாட்டினை உருவாக்குவோம், மந்த போஷணம் இல்லாத நாடாக உருவாக்குவோம்.
2020 ஆம் ஆண்டளவில் இலங்கையரின் ஆயுள் 80 வயதாக இருக்கும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
2020 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்துக்கு வருடாந்தம் 1 இலட்சம் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் திட்டம்.
2020 இல் உயர் தொழில்நுட்பம் நிறைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம். தகவல் தொழில்நுட்பத் துறையில் 1 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு.
2020 இல் கறுவா ஏற்றுமதியில் ஈடுபடும் 10 நாடுகளுக்குள் இலங்கையையும் உள்ளடக்குவோம்.
2020 இல் ஏற்றுமதி வருமானத்தை 20 பில்லியன் டொலர்களாக உயர்த்துதல்.
2020 சுற்றுலாத் துறையில் 5 பில்லியன் வருமானம் ஈட்டும் துறையை மாற்றுதல்
2020 இல் தனிநபர் வருமானம் 7500 டொலர்கள்
2020 இல் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையும் சூழலை நாட்டில் ஏற்படுத்தி வெளிநாட்டுக் கடனை குறைக்கும் திட்டம்.
2005 முதல் எந்தவொரு அரச நிறுவனத்தையும் நாம் தனியார்மயப்படுத்தவில்லை.
அரச துறைகளுக்கு 5 இலட்சம் ஊழியர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
2015 இல் 1600 பில்லியன் உத்தேச அரச வருமானம்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் லங்கா நிறுவனங்களின் அபிவிருத்திக்கு 150 மில்லியன் டொலர்கள்
தேசிய வருமான வரித் திணைக்களம் நாளை முதல் கணனி மயப்படுத்தப்பட்டு இயங்கவுள்ளது. உள்நாட்டு இறைவரி, சுங்கத் திணைக்களங்ளும் இதில் உள்ளடக்கம்
முதல் 25 அலகுகளுக்கான நீர் கட்டணம் 10 வீதம் குறைப்பு
புதிதாக 500 பஸ்கள் இறக்குமதி செய்யத் திட்டம்.
போக்குவரத்து நெரிசலை குறைத்து உள்நாட்டு விமான நிலையங்களை அமைப்பதற்கு 10 பில்லியன் ஒதுக்கீடு.
2015 இல் புதிதாக அபிவிருத்தி வங்கி
ஆயுர்வேத வைத்தியர்களுக்கு 5000 கொடுப்பனவு அதிகரிப்பு
இலங்கை வங்கியின் வளர்ச்சிக்கு 10 பில்லியன் ஒதுக்கீடு
சட்டத்துறை வழக்குகளை விரைவாக நடத்திச் செல்லவும் நீதிபதிகளின் அறிவை விருத்தி செய்வதற்கு 750 மில்லியன் ஒதுக்கீடு
புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்க 2000 மில்லியன் ஒதுக்கீடு
கிராமிய வீதி அபிவிருத்திக்கு 20000 மில்லியன் ஒதுக்கீடு
ரயில் ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க 2000 மில்லியன் ஒதுக்கீடு
2015 இல் தபால் சேவையை முழுமையாக நவீனப்படுத்த 1500 மில்லியன் ரூபா.
தபால்காரர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்
யானைகளால் ஏற்படும் விவசாய இழப்புகளுக்கு காப்புறுதி
350 ரூபாவுக்கு வழங்கப்படும் உரம் அதே விலையில் வழங்கப்படும். நெல் விதைகள் இலவசமாக வழங்கப்படும்
அரிசி கொள்வனவு விலை 34 முதல் 40 ஆக அதிகரிக்கப்படும்
கைவிடப்பட்ட விவசாய நிலங்களை அபிவிருத்தி செய்ய 3 ஆண்டு கால திட்டம்.
சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு 50 கிலோ உரம் 1500 ரூபாவுக்கு வழங்கப்படும்
சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 625000 இலிருந்து 750000 வரை அதிகரிக்கப்படும்
இறப்பர் உற்பத்தித் திணைக்களத்துக்கு அதன் அபிவிருத்திக்காக வழங்கப்படும் தொகை 3500 மில்லியனால் அதிரிப்பு
இறப்பர் இறக்குமதிக்கான செஸ்வரி 10 ரூபாவால் அதிகரிப்பு
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், அகலவத்தை இறப்பர் அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றை நவீன மயப்படுத்த 3000 மில்லியன் ஒதுக்கீடு
சுங்கத் திணைக்களத்துக்கு நவீனமயப்படுத்தப்பட்ட சேவை நிலையம்
ஆடை தொழிற்சாலை ஊழியர்ளுக்கு ஓய்வூதியம்
அடுத்த வருட மத்தியில் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை. இதன்மூலம் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த உத்தேசம்
நன்னீர் மீன் உற்பத்திக்காக 200 மில்லியன் ஒதுக்கீடு
மீனவர்களின் குடும்ப நலன், உட்கட்டமைப்புக்காக 3 வருட விஷேட திட்டம்.
பால் லீற்றருக்கான உத்தரவாத கொள்வனவு விலை 60 ரூபாவாக அதிகரிப்பு, யோகட் 3 ரூபாவாக குறைப்பு
சிறுநீரக நோயை இல்லாதொழிக்க நீரை சுத்தப்படுத்தும் உபகரணங்களை விநியோகிக்கத் திட்டம்.
இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாதாந்தம் 3 ஆயிரம் வழங்கத் திட்டம்.
பெண்களின் புற்றுநோயை தடுப்பதற்காக 700 மில்லியன் ஒதுக்கீடு
அனைத்து மக்களுக்கும் நடமாடும் வைத்திய சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ள 500 மில்லியன்
அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாதாந்தம் 2500 ரூபா கொடுப்பனவு
முன்பள்ளி இல்லாத அனைத்து இடங்களிலும் முன்பள்ளிகள் அமைப்பதற்கு நடவடிக்கை
கிராமிய பாடசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த 1500 மில்லியன்
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 500 இலிருந்து 1500 ஆக அதிகரிப்பு
ஆசிரியர்களின் சம்பள, பதவி உயர்வுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்களுக்கு 9500 கொடுப்பனவு
பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடியாத மிகக் குறைவான வருமானம் பெறும் மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா புலமைப் பரிசில். ஒரு மாணவருக்கு மாதாந்தம் 3 ஆயிரம் ரூபா புலமைப் பரிசில் கொடுப்பனவு
மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு மாதாந்தம் 4000 ரூபாவாக அதிகரிப்பு
அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நெனசல மத்திய நிலையம் அமைக்க 1000 மில்லியன் ஒதுக்கீடு
25000 திவிநெகும கிராமங்கள்
கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான ஆகாரம் மற்றும் முன்பள்ளி மாணவர்களின் காலை உணவுக்கு 500 மில்லியன்
கொழும்பில் பழைய தொடர்மாடிகளை புனர்நிர்மாணம் செய்யும் திட்டத்தை தொடர்வதற்கு 750 மில்லியன் ரூபா
மலையகத்தில் 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
முதியவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 2000 ஆக அதிகரிப்பு
விசேட தேவையுடையோருக்கு மாதாந்தம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு
சிறுவர் துஷ்பிரயோகங்கள், பெண்கள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளன.
சுகததாச, கெத்தாராம விளையாட்டரங்குகளை அபிவிருத்தி செய்வதற்கு 2250 மில்லியன் ஒதுக்கீடு
மாகாண சபைகளுக்கு 15000 புதிய ஊழியர்களை இணைத்துக்கொள்ள திட்டம்
தனியார் பஸ்களின் சாரதி, நடத்துநர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்க திட்டம்
பொலிஸ் கான்டபிள்களுக்கு நிவாரண விலையில் மோட்டார் சைக்கிள்கள்
அனைத்து அரச ஊழியர்களுக்குமான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2200 ஆக அதிகரிப்பு.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள் சம்பளத் தொகையோடு இணைக்கப்படும்.
தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கும்படி யோசனை

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &