ஜெருசலமில் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பலஸ்தீன் சிறுவன் முஹம்மது அபூ காதிர் உயிரோடு எரித்துக்கொலைச் செய்யப்பட்டது போஸ்ட்மார்டம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சிறுவனின் கொலைக்கு காரணம் தங்களுக்கு தெரியாது என்று இஸ்ரேல் கூறுகிறது.
மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இரவு காதிர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது . வெள்ளிக்கிழமை கிழக்கு ஜெருசலமில் ஷுஃபாத் மாவட்டத்தில் காதிரின் வீட்டிற்கு அருகே நடந்த யூத ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர் இதன்போது அரபுகளுக்கு மரணமே என்ற கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளது . இவர்களால் கடத்தப்பட்டு குறித்த 17 வயது சிறுவன் எரித்து கொல்லப் பட்டுள்ளதாக பலஸ்தீனர்கள் தெரிவிக்கின்றனர் .
இந்த படுகொலையை யூத மத குருமாரும் , பிரதேச அமைச்சர்களும் தூண்டியதாகவும் யூத கடும்போக்கு வாத குழுக்களினால் இந்த தாக்குதல் நடாத்தப் பட்டதாக பலஸ்தீனர்கள் தெரிவிகின்றனர். ஆக்கிரமிப்பு பலஸ்தீனில் இயங்கும் யூத இனவாத அமைப்புக்களை தடை செய்யுமாறு அப்பாஸ் இஸ்ரேலை கோரி வருகிறார் அதை செய்ய மறுத்துவருகிறது இஸ்ரேல அதேவேளை இஸ்ரேலிய பிரதமரும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான பழிவாங்கும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் தேடுதல் என்ற போர்வையில் பலர் படுகொலை செய்து வருவதுடன் யூத குடியேற்றக் காரர்களை கொண்டு பாலஸ்தீனர்களுக்கு மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமையால் பலஸ்தீன வாலிபர்கள் கொதிப்படையசெய்யப்பட்டுள்ளனர்
காதிரின் கொலையை கண்டித்து வீதியில் இறங்கி போராடிய பலஸ்தீன் இளைஞர்கள்-இஸ்ரேல் போலீஸ் இடையே மோதல் நீடித்து வருகிறது. அதேவேளை இஸ்ரேலிய போலிஸ் அபூ காதிரின் கொலையுடன் தொடர்பு பட்ட ஆறு பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது