BREAKING NEWS

Jul 22, 2014

ஃபலஸ்தீன முஜாஹிது களுக்கு உதவுங்கள் : யூசுப் அல் கர்ழாவி


இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் முஜாஹிதுகளுக்கு முடிந்த அளவு உதவுமாறு உலக முஸ்லிம்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர் அவையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதாரரீதியாகவோ, மனிதநேய பணிகள் மூலமாகவோ அல்லது ரமலானின் கடைசிப் பத்துகளில் பிரார்த்தனைகளின் மூலமாகவோ காஸ்ஸா மக்களின் வெற்றிக்காக முயற்சிக்கவேண்டும் என்று கர்ளாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

’சியோனிஸ்டுகளுக்கு உதவும் அரபு மற்றும் அரபு அல்லாத நாடுகள், மேற்கத்திய சக்திகளின் வெற்றிக்கொடி உயர அனுமதிக்காதே’ என்று கர்ளாவி அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்துள்ளார். காஸ்ஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை மெளனமாக பார்த்துக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டது என்று கர்ளாவி உலக முஸ்லிம்களுக்கு நினைவூட்டியுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &