
சவுதி – ஈராக் எல்லைப்பகுதிக்கு 30,000 சவுதி இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தினால் சவுதி – ஈராக் எல்லைப்பகுதியை விட்டு ஈராக்கிய இராணுவம் பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையிலேயே சவுதி அரேபியா எல்லையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக அல் அரேபியா தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் எல்லைப்பகுதி இன்னும் தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் படையினர் பின் வாங்கவில்லையெனவும் ஈராக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை எல்லைப்பகுதியை கை விட்டு பாலைவனத்தில் பயணிக்கும் சுமார் 2500 ஈராக்கிய இராணுவத்தினரைக் காண்பிக்கும் காணொளியையும் இத்தொலைக்காட்சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.