BREAKING NEWS

Jun 20, 2014

புத்தளத்தில் போராட்டம் !!! ஜும்மா தொழுகையின் பின் ஆரம்பம்



இன்று பிற்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் புத்தளம் நகரில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடைப்பெற ஏற்பாடகியுள்ளதாக சற்று முன்னர் கிடைத்த செய்திகள் கூறுகின்றன.

அமைதியான முறையில் நடைபெற ஏற்ப்பாகியுள்ள இந்த மனிதச்சங்கிளிப் போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரானது அல்லவென்றும், பெருவளைப்பகுதி முஸ்லிம்களின் துயரங்களில் பங்கெடுக்கும் ஒரு உணர்வுப்போராட்டம் என்றும் இந்த மனிதச் சங்கிளிப்போராட்டதின் ஆலோசகரான டாக்டர். இல்யாஸ் தெரிவிக்கின்றார். ” இது புத்தளத்தின் உணர்வு மிக்க இளைஞர்களின் ஏற்பாடு. பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட நமது உறவுகளுக்காக இதனைக் கூட செய்யாவிட்டால் கேவலம் என்ற கருத்தின் அடிப்படையில் இதனை செய்கிறார்கள். எனவே இந்தப்போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. என்றும் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் .ஐ.எம். இல்யாஸ் கூறினார்.

இன்றைய இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் நாலாம் கட்டை தொடக்கம் பாலாவி வரையில் இருக்கும் மக்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய இந்த இந்தப்போராட்டத்தில் வட மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எச். நியாஸ் அவர்களும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &