BREAKING NEWS

Mar 4, 2014

மஸ்ஜிதுல் தாருஸ் ஷாபி (தெஹிவளை) மூடப்பட்டது !

பேரினவாதிகளால் சர்ச்சைக்குள்ளாக்கப் பட்ட தெஹிவளை மஸ்ஜித்துல் தாருஸ் ஷாபி நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வழங்கப்பட்ட இத்தீர்ப்பின் பிரகாரம் வக்பு வாரியத்திலும் பதிவு செய்யப்பட்டு இயங்கியதாகக் கூறப்படும் இப்பள்ளிவாயல் “நாட்டின் சமாதானத்திற்கு பங்கம் விளைவிப்பதற்கான” சட்டத்தின் கீழ் மூடப்பட்டிருக்கின்றமை இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு கிடைத்திருக்கும் பாரிய பின்னடைவாகும்.

உலகிலேயே பள்ளிவாசல் ஒன்று சமாதானத்துக்கு எதிராக செயற்படுவதாகக் கூறி மூடப்பட்டிருக்கும் செயலானது ஒட்டு மொத்த முஸ்லிம்களின் மனதையும் புண்படுத்தும் விடயமாகினும், இந்தப் பள்ளிவாசல் மூடலை எதிர்த்து நமது சமூகத்தில் யார் பேசப்போகிறார்கள்? என்பது கேள்விக்குறியே.

பேரினவாத அழுத்தங்கள் இன்று சட்டரீதியாக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை நாட்டின் பல்வேறு பாகங்களிலும் தொடரக்கூடிய அபாயமிருப்பதும் மஹியங்கனை பள்ளிவாசல் கடந்த காலத்தில் அரசியல் அழுத்தத்தாலேயே மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &