BREAKING NEWS

Feb 16, 2014

மாதம்பை பள்ளி நிர்வாக கடிதத்திற்கு SLTJ பதில் மறுப்பு.

MN

மாதம்பையில் 6 பேர் தனித்து செயற்பட போவதாக கடிதம் கொடுத்தவுடன் பள்ளி நிர்வாகம் பிரச்சினைபட நினைத்தவர்களை ஆரம்பத்தில் அமைதிபடுத்தினார்களா? இது முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் கதையில்லையா? மாதம்பையில் நடப்பது என்ன என்பதை அறிவதற்கு கொஞ்சம் பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டியுள்ளது.
1)முதலில் சுமார் 7 வருடங்களுக்கு முன்பாக மாதம்பையில் ஜமாத்தின் பிரச்சாரகர் பர்சான் அவர்கள் பெண்களுக்கான நிகழ்ச்சியொன்றினை நடாத்த வந்த போது கலாம் மவ்லவியினால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. மார்க்க சுதந்திரத்தில் எப்படி கைவைக்க முடியும் என்று அமீர் ஹஜ்ஜூல் அக்பர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு “திருமணம் முடிக்காதவர்கள் பெண்கள் பயான் செய்ய ஜமாஅத் அனுமதிப்பதில்லை“ என்றார். “நாம் உங்கள் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் இல்லையே! இந்நிபந்தனை எம்மை எப்படி கட்டுப்படுத்தும்? “ என்று கேட்டதற்கு கோபப்பட்டு எம்மை திட்டித்தீர்த்தார்! அனுமதி மறுக்கப்பட்டது சரிதான் என்று பிடிவாதமாக இருந்தார்…
இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட கலாம் மவ்லவியும், ஹஜ்ஜூல் அக்பரும் யார்? பிரச்சினைக்கு வந்தவர்களில் “சிலரா“? அல்லது ஹஜ்ஜூல் அக்பர் எம் அமைப்பை சார்ந்தவர் இல்லை எனப்போகிறீர்களா?
2)சகோதரர் ரம்ஸான் அவர்களின் வீட்டில் சகோதரர் பர்சான் அவர்கள் பயான் நிகழ்ச்சி செய்த போது அத்து மீறி வந்து கல்லெறிந்து ஆபாசம் பேசி அசிங்கமாக நடந்தார்களே! இப்பிரச்சினை நீங்கள் ஜூம்ஆவில் இருக்கும் போது நடக்கவில்லையே? ஏனெனில் திங்கட்கிழமையில், அதுவும் இரவுப் பொழுதில் யாரும் ஜூம்ஆ தொழுவது கிடையாதே!
ஊரே திரண்டு வந்து தாக்கிய போதும் அந்தப்பக்கம் கூட திரும்பிப்பார்க்காது உங்கள் பள்ளிவாசல் கதவடியில் கைகட்டி உங்கள் நிர்வாகம் வேடிக்கை தானே பார்த்தது? நிர்வாகம் சொன்னாலும் கேட்காத காவாலி சமூகத்தை தான் ஜமாஅதே இஸ்லாமி உருவாக்கியுள்ளதா?
உங்கள் கட்டுக்கோப்பான தலைமைத்துவமும் கீழ்படிவுள்ள முரீதிஸமும் அன்று காணாமல் போனது எப்படி?
அத்தோடு முடிந்ததா? போலிஸூக்கு வந்து “இவர்கள் ஊரை குழப்புகிறார்கள். இவர்களது நிகழ்ச்சிகளை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று மணிக்கணக்கில் வாதிட்டது யார்? அதுவும் “அந்த சிலர் தானா“? அல்லது பள்ளி நிர்வாக உறுப்பினர்களாகிய நீங்களா? ஏன் இந்த இரட்டை வேடம்?
சரி, ரமீஸ் நானாவின் வீட்டிலே இருந்து வானொலி நிகழ்ச்சியொன்றினை செய்ய எத்தனித்த போது போலிஸூக்கு புகார் கொடுத்து அதையும் தடுத்தது அந்த “சிலரோ“?
ஆகவே மாதம்பையில் நடப்பது எதேச்சையாக சிலரால் முன்னெடு்க்கப்படும் குழப்பமல்ல! இது கடந்த 7 வருடங்களாய் ஜமாஅதே இஸ்லாமியின் ஆட்சிப்பரப்பான “குட்டி மதீனாவில்“ தமது கிலாபத்தை தக்க வைப்பதற்காக தலைமைத்துவங்கள் திட்டமிட்டு நடாத்தும் நாடகம்! அதனால் தான் இதுவரை நடந்த எந்தவொரு சம்பவம் குறித்தும் ஹஜ்ஜூல் அக்பர் வாயை கூட திறக்காமல் அமைதி காக்கிறார்.
அவர் அமைதி காக்கத்தான் செய்வார். ஏனெனில் சமூகத்தில் பிரச்சினை வந்துவிட்டால் சரியான தீர்வை சொல்லி ஏன் குட்டுப்படுவானே என நினைத்து செல்போனை சுவிச் ஓப் செய்பவர் தானே அவர்? இந்த அராஜகத் தொடரின் இறுதி கட்டம் தான் இரு வாராங்களாக நடப்பது.. ஏலவே நீதிமன்றத்தின் ஊடாக “தவ்ஹீது ஜமாஅத் தரப்பினர் தமது பிரச்சாரத்தினை தாராளமாக செய்யலாம். அந்த சுதந்திரம் அவர்களுக்கு உண்டு“ என்ற தீர்ப்பு எமது கை வசம் இருக்கத்தக்க தான் இத்தடவையும் இவ்வராஜகத்தில்.
நீங்கள் ஈடுட்டுள்ளீர்கள்! நீங்கள் நியாய வான்களாக இருந்தால் என்ன செய்தி்ருக்க வேண்டும்? சென்ற வாரம் பிரச்சினை உருவான போதே உங்கள் ஊர் மக்களையெல்லாம் உங்கள் பள்ளியில் ஒன்று திரட்டி “இது அவர்களின் உரிமை! இதை நாம் தடுக்கக் கூடாது! அவர்களை செய்வதை அவர்கள் செய்யட்டும்! நாம் செய்வதை நாம் செய்வோம்! மக்கள் விரும்பியவர்களின் கருத்தை ஏற்று விரும்பிய இடத்திற்கு செல்லட்டும். நீங்கள் பொறுமையாக இருங்கள்! யாரும் பிரச்சினைக்கு செல்ல வேண்டாம். அது இஸ்லாமிய பண்பாடு கிடையாது“ என்று நல்லுபதேச்ம் புரிந்திருக்க வேண்டாமா?
இதை நீங்கள் செய்தீர்களா? சரி இவ்வாரம் பிரச்சினை நடக்கும் போது குறைந்த பட்சம் உங்கள் பள்ளியின் ஒலிபெருக்கியிலாவது “மக்களே பிரச்சினைபடாதீர்கள்“ என்று அறிவித்திருக்கலாமே? ஏன் இதை செய்யவில்லை?
இத்தனையையும் அறிந்த பின்னரும் தாக்கப்படும் இடத்திற்கு வந்த உங்கள் நிர்வாகிகளில் சிலர் என்ன கூறினீர்கள்? எமது உரிமைக்காக குரல் கொடுத்தீர்களா? அல்லது கூட்டத்துடன் சேர்ந்து இதன் பிறகு இப்படி செய்யாதீர்கள் என்று கதையளந்தீர்களா?
பிரச்சினையை தூண்டிவிடும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மொத்த ஊரும் திரண்டு வந்து தாக்கும் போது மௌனியாக இருந்துவிட்டு இப்போது ஏன் இத்தனை தன்னிலை விளக்க கடிதம்? ஊரே திரண்டதை கண்ணால் பாத்த பின்னரும் உங்களால் மட்டும் எப்படி “சிலர்“ என்ற சொல்லை பயன்படுத்த முடிந்தது? எமது தரப்பை வெளியேற்றுவதற்கான போலிஸ் ஏற்பாட்டை முழுக்க முழுக்க எமது தலைமை செய்திருக்கும் போது எப்படி நீங்கள் எம்மை பாதுகாப்பாக வெளியேற்றியதாக நாகூசாமல் சொல்ல முடிகிறது? எம்மை கொன்றொழிக்கும் வெறித்தனத்துடன் வீசி எறியப்பட்ட செங்கல் தவறிச்சென்று தாக்க வந்தவர்களின் ஒருவருடைய உடம்பிலே பட்டு காயப்பட்டதை வசதியாக மறைத்துவிட்டு “எம்மை பாதுகாக்கப் போய் தாக்கப்பட்டதாக“ ஏன் பித்தலாட்டம் ஆடுகிறீர்கள்?
ஒன்றுமட்டும் தெளிவாக பளிச்சென்று தெரிகிறது.. உங்களி கிலாபத் கனவுக் கோட்டை உங்கள் கண்களுக்கு முன்பாகவே சுக்கு நூராக சிதருவதை உங்களால் தாங்க முடியாதுள்ளது.. அதனால் தான் இத்தனை நாளாய் மறைக்கப்பட்டிருந்த ஜமாஅதே இஸ்லாமியின் சுயரூபம் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. கருத்துச் சுகந்திரம், வேற்றுமையில் ஒற்றுமை என்பது எல்லாம் உங்கள் இயக்கத்திற்கு ஆல்சேர்க்கும் யுக்தியே தவிர அது உண்மை கிடையாது என்பதை உங்களது ஒரு கல்லெறி உணர்த்திவிட்டது. எப்போது எம்மை தாக்குவதற்காக கல்லை சுமந்தீர்களோ அப்போதே உங்கள் கண்ணாடி ஆட்சிக் கோட்டை சுக்கு நூராகிவிட்டது.
நடுநிலை மக்கள் உங்கள் முகத்தை நன்கு உணர்ந்துவிட்டனர். எமது தஃவா வழிமுறைகளை காடைத்தனம் என்று விமர்சிக்கும் ஹஜ்ஜூல் அக்பர், நுவரெலியாவில் அவரது தம்பி ஒரு பள்ளிக்குள் வைத்து தப்லீக் அன்பர்களால் தாக்கப்பட்டபோது அதை கண்டித்து அல்ஹஸனாத்தில் இரு பக்க கண்டன கட்டுரையை பிரசுரித்தவர் மாதம்பையில் அவரது பயிற்சிப் பாசறையில் வார்க்கப்பட்ட ஜம்இய்யதுத் தலபா மாணவர் அமைப்பினரும், முஸாஇத் உறுப்பினர்களும் செய்துள்ள அப்பட்டமான காடைத்தனத்தை எப்படி விமர்சிக்கப்போகிறார்? விமர்சிப்பாரா? அல்லது சட்டம் அடுத்தவனுக்குத் தான். நீதி நியாயம் எல்லாம் எமக்கு இல்லை என்று இருந்துவிடுவாரா? பொருத்திருந்து பார்ப்போம்.
By: SLTJ ஊடக பிரிவு.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &