பறகஹதெனிய சொக்கர் எக்கடமி எற்பாடு செய்யூம் அணிக்கு ஏழு பேர்கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 26ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பறகஹதெனிய தேசியப் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றது.
பாடசாலை மாணவர்களது உதைப்பந்தாட்ட திறன்களை மென்மேலும் விருத்தி செய்யூம் நோக்கில் மற்றும் அவர்களை எதிர்கால உதைப்பந்தாட்டத் துறையின் விற்பன்னர்களாக திகழ வைக்கும் நோக்கிலும் ஒழுக்க விழுமியங்களில் பரிபூரணமிக்க விளையாட்டு வீரர்களை சமூகத்துக்கு விடுவிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஜனவரி 3ஆம் தினதி ஆரம்பிக்கப்பட்ட பறகஹதெனிய சொக்கர் எக்கடமியில் தற்போது ஏறத்தாழ 40 மாணவர்கள் தமது பெற்றௌர் மற்றும் பாடசாலை அதிபரின் விருப்பத்திற்கிணங்க பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படும் எக்கடமியின் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியியல் வசதியினை மெருகூட்டிக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டித் தொடரில் வெற்றிபெறும் அணிக்கு வெற்றிக் கேடயத்துடன் ரூபா 15,000 பணப்பரிசிலும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு கேடயத்துடன் ரூபா 10,000 ணப் பரிசிலும் சிறந்த தொடர் வீரர் மற்றும் சிறந்த தொடர் கோல் காப்பாளர் ஆகிய விருதுகளும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.


