நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதுண்ட பெளத்த பிக்குவின் முச்சக்கர வண்டி
பரகஹதெனிய பெரிய பள்ளி வாயல் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் பெளத்த பிக்கு ஒருவருடன் வந்த முச்சக்கர வண்டி ஒன்று( MONDAY 20-01-2014) மோதுண்டுள்ளது.
கண்டியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி பரகஹதெனிய பெரிய பள்ளி வாயல் எதிரே ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த KDH வண்டியொன்றில் குறித்த முச்சக்கர மோதுண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெளத்த பிக்கு மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்
அங்கிருந்து அம்பியுலன்ஸ் வண்டி மூலம் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மோதுண்ட இருவரையும் உடனடியாக மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு பெரிய பள்ளிவாயலின் மெளலவி அவர்களே எடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




