BREAKING NEWS

Nov 21, 2013

PRESIDENT CUP 2013 தொடரில் இறுதிப் போட்டிக்கு ELEVEN STARS தகுதி


போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி 

குருநாகல் மாவட்ட கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தில் பதிவுசெய்துள்ள கால்ப்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெறும் PRESIDENT CUP 2013 போட்டித்தொடரின் இறுதிப் போட்டிக்கு பரகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் அணியினர் நேற்று தகுதி பெற்றனர். 

இலவன் ஸ்டார்ஸ் மற்றும் குருநாகல் பெளிகன்ஸ் அணியினருக்கு இடையில் மாளிகாபிட்டிய மைதானத்தில் இப்போட்டி ஆரம்பம் முதலே சூடு பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

PREMIER  LEAGUE அணியான PELICANS மற்றும் ELEVEN STARS அணியினருக்கிடையில் வழமையாக பலத்த போட்டி இடம்பெறுவது வழக்கம். எனினும் கடந்த வருடம் இடம்பெற்ற KDFL (Kurunegala  District Football  League ) போட்டித் தொடரிலும் இலவன் ஸ்டாரஸ் அணி CHAMPION பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

வழமையாக இலவன் ஸ்டார்ஸ் பெளிகன்ஸ் என்றாலே மைதானம் முழுதும் பார்வையாளர்கள் திரளும் இப்போட்டியில் சுமார் 1000 பேரளவில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பம் முதலே இரு அணிகளும் தமது அணிக்காக ஒரு கோளை போட்டு முன்னிலை வகிக்க முனைந்தாலும் போட்டியின் நிறைவு வரை இரு அணிகளுக்கும் எவ்வித கோல்களையும்பெற முடியவில்லை என்பது விசேட அம்சமாகும். 

இறுதியில் பெனல்டி மூலம் வெற்றி தோல்வி முடிவுசெய்வதற்கு தீர்மானித்ததட்கு அமைவாக இலவன் ஸ்டார்ஸ் அணியினர் 5-3 எனும் அடிப்படையில் சிறந்ததொரு வெற்றியை உறுதி செய்தனர். 

மாபெரும் இறுதிப் போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது டிசம்பர் 01ஆம் திகதி இடம்பெரவிருக்கின்றது.






Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &