BREAKING NEWS

Nov 9, 2013

காதலனை LORRY ஏற்றிக் காயப்படுத்திய காதலி

வாஷிங்டன்: மெக்டோனால்ட்ஸ் உணவகத்திற்குக் கூட்டிச் செல்ல மறுத்த காதலன் மீது கடும் கோபம் கொண்ட ஒரு அமெரிக்கப் பெண், அங்கு நின்றிருந்த மினி லாரியை எடுத்து காதலன் மீது 3 முறை ஏற்றி படுகாயப்படுத்தியுள்ளார். 

அந்த கொலை வெறிக் காதலியை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் பெயர் கிறிஸ்டல் கிரீர் புரூக்ஸ், வயது 33. டென்னஸ்ஸியின், கிங்ஸ்போர்ட் நகரைச் சேர்ந்தவர். இவரது காதலர் பெயர் சான்டியாகோ ஹெர்னாண்டஸ். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் ஒரு மினி டிரக்கில் புறப்பட்டு மது அருந்தப் போயுள்ளனர்.

 நன்றாக மது அருந்திய பின்னர் தன்னை மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்குக் கூட்டிப் போகுமாறு கூறியுள்ளார் புரூக்ஸ். ஆனால் தன்னால் முடியாது என்று கூறியுள்ளார் சான்டியாகோ. 

இதனால் கோபமடைந்த புரூக்ஸ் டிரக்கை நிறுத்துமாறு கூறியுள்ளார். சாண்டியாகோவும் நிறுத்தினார். பின்னர் அவரை கீழே இறங்கச் சொன்னார் புரூக்ஸ். அவரும் இறங்கினார். 

அதன் பின்னர் படுவேகமாக டிரக்கை கிளப்பிய புரூக்ஸ், காதலன் மீது மோதினர். ஒருமுறை இருமுறை அல்ல, 3 முறை மோதினார். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்தார் சாண்டியாகோ. அவருக்கு தோள்பட்டை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புரூக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &