ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 24வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இதற்கமைய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம் பிள்ளை இன்று தமது அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கூட்டத் தொடரில் விளக்கமளிக்கவுள்ளார்.
அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை மீதான விவாதமும் இன்று நடைபெறவுள்ளது.
குறிப்பாக கூட்டத் தொடரின் முதல் வாரத்தில் சுத்தமான குடிநீர் தொடர்பிலும், மரண தணடனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரண தன்டனை நிறைவேற்றப்பட்டவர்களுடைய பிள்ளைகளின் மனித உரிமைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
அத்தோடு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் முதியோரின் மனித உரிமைகள் தொடர்பிலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் முதல் ஏழு நாட்களில் கலந்துரையாடப்படவுள்ளது.
